Former minister Manikandan seeks bail in court

Advertisment

திருமண ஆசைகாட்டி நடிகையை மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரிய மனுவில், காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர்.

Advertisment

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட மணிகண்டனை வரும் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் கேட்டதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.