அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை புகார் அளித்திருந்த நிலையில், அது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் மணிகண்டனிடம்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் பலமுறைஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மணிகண்டனுக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.