முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு இரண்டு நாள் காவல்துறை காவல்!

FORMER MINISTER MANIKANDAN CHENNAI HIGH COURT ORDER

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு இரண்டு நாள் காவல்துறை காவல் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து சென்று விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை விடுத்தக் கோரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக் கேட்டு காவல்துறை தாக்கல் செய்தா மனு மீது விசாரணை நடைபெற்றது. மதுரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைபேசியில் படங்களை ஆராய வேண்டியிருப்பதால் காவலில் எடுக்க அனுமதிக் கோரப்பட்டது.

அதனையேற்ற நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருக்கிறது.

Chennai former minister highcourt manikandan
இதையும் படியுங்கள்
Subscribe