/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2762.jpg)
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
விசாரணையின் போது, அவர் 01/04/2015 முதல் 31/03/2022 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுய லாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகத்தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3322.jpg)
இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது மகன் உட்பட உறவினர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு. விசாரணை நடந்துவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க காமராஜுக்கு தொடர்புடைய 49 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலிலும், திருச்சி கே.கே நகரில் உள்ள அவரது நண்பர் பாண்டியன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)