Advertisment

''முன்னாள் அமைச்சர் இதை ஒப்புக்கொள்ள வேண்டும்''-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

'' The former minister has to admit this '' - Interview with Minister Senthilpalaji

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''மின் மிகை மாநிலம் என்று சொன்னவர்கள் ஏன் அதை சரியாக பராமரிக்கவில்லை என்று கேட்கிறேன். அந்த பராமரிப்புப் பணிகளால் தான் மின்தடை ஏற்படுகிறது முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

காற்றாலை ஓடும்போது எப்படி தமிழகத்தில் மின்தடை வரும் என முன்னாள் அமைச்சர் கேட்கிறார். பராமரிப்பு செய்யப்படவில்லை என்றால்காற்றாலை மின்சாரத்தைக்கூட எப்படி பயன்படுத்த முடியும். கடந்த ஆட்சியில் ஒன்பது மாதகாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை முன்னாள் அமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் இருக்கக்கூடிய நாமக்கல் மாவட்டத்திலேயே இப்பொழுதுதான் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 10 நாட்களுக்குள் இந்த பணிகள் சீரமைக்கப்படும்'' என்றார்.

Advertisment

காற்றாலை மின்சாரம் இருந்தும் தொடர்ந்து தமிழகத்தில் ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என நேற்று முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,தற்போது அமைச்சர்செந்தில் பாலாஜி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

electicity thangamani senthil balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe