தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு பிரதிநியாக, அமெரிக்கா சிகாகோவில் நடந்த 10-வது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன். அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான அவரை, ‘மிகச் சிறந்த ஆளுமை’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/appadi podu podu.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aadum varai aattam.jpg)
வடநாட்டு ஸ்டைலில் ஒருபக்க சால்வை அணிந்து கம்பீரமாக நிற்கும் அவரது போட்டோவைப் போட்டு வாழ்த்தியிருக்கின்றனர். மேலும், உலகத் தமிழ் மாநாட்டில் அவர் குஷியாக நடனமாடிய வீடியோவையும் வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.“முன்புபோல் அல்ல. இரண்டாம் கட்டத் தலைவர்கள், இப்போது எப்படி வேண்டுமானாலும் பேச முடிகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kambeeram.jpg)
அட, பலரோடு குதூகலமாக பொதுவெளியில் ஆடவும் முடிகிறது. கட்டுப்பாடு அறவே தளர்ந்து, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதென்பது சுகமானது.” என்று நம்மிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் வைகைச்செல்வன் நடன வீடியோவை நமக்கு அனுப்பிய அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.சங்கடங்கள் விலகி, சந்தோஷம் பொங்கிடும் வேளையில், நாட்டின் நலனையும் மனதில் நிறுத்தி செயல்பட்டால், மக்களும் மகிழ்வார்கள்!
Follow Us