Skip to main content

முன்னாள் அமைச்சரை ஆடவைத்த உலகத் தமிழ் மாநாடு!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு பிரதிநியாக, அமெரிக்கா சிகாகோவில் நடந்த 10-வது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன். அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான அவரை,   ‘மிகச் சிறந்த ஆளுமை’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

former Minister dance in World Tamil Conference

 

former Minister dance in World Tamil Conference

வடநாட்டு ஸ்டைலில் ஒருபக்க சால்வை அணிந்து கம்பீரமாக நிற்கும் அவரது போட்டோவைப் போட்டு வாழ்த்தியிருக்கின்றனர். மேலும், உலகத் தமிழ் மாநாட்டில் அவர் குஷியாக நடனமாடிய வீடியோவையும் வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.“முன்புபோல் அல்ல. இரண்டாம் கட்டத் தலைவர்கள், இப்போது எப்படி வேண்டுமானாலும் பேச முடிகிறது. 

 

former Minister dance in World Tamil Conference


அட, பலரோடு குதூகலமாக பொதுவெளியில் ஆடவும் முடிகிறது. கட்டுப்பாடு அறவே தளர்ந்து, சுதந்திரக் காற்றை சுவாசிப்பதென்பது சுகமானது.” என்று நம்மிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் வைகைச்செல்வன் நடன வீடியோவை நமக்கு அனுப்பிய அக்கட்சியின் நிர்வாகி ஒருவர். சங்கடங்கள் விலகி, சந்தோஷம் பொங்கிடும் வேளையில், நாட்டின் நலனையும் மனதில் நிறுத்தி செயல்பட்டால், மக்களும் மகிழ்வார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.