Skip to main content

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Former Minister C.V. Shanmugam appeared in court

 

அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலம் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசும்போது, தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அதே சமயம் கடந்த மே 1 ஆம் தேதி கோட்டக்குப்பம் என்ற இடத்திலும் சி.வி. சண்முகம் இதேபோன்று அவதூறாகப் பேசி இருந்தார். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (21.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் 3வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் இந்த வழக்கை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடைச்சல் தரும் ஓ.பி.எஸ் அணி; எரிச்சலில் இ.பி.எஸ் அணி - ஜெயலலிதா பிறந்தநாள் கலேபரம்! 

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Bitterness between supporters of eps  and supporters of ops  in Vathalagundu

வத்தலகுண்டில் ஜெயலலிதா பிறந்த நாளை இ.பி.எஸ் அணியினர் கேசரி, கொடுத்தும் லட்டு கொடுத்தும் கொண்டாடினர். ஆனால், ஓபிஎஸ் அணியினர் முட்டை பிரியாணி போட்டு இ.பி.எஸ் அணியை எரிச்சல் ஏற்படுத்தினர். பழைய வத்தலகுண்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முனியாண்டி விலாஸ் ரத்தினம் ஏற்பாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவு ஊராட்சி செயலாளர் முத்தையா என்பவர் அதிமுக கொடி, இரட்டை இலை தோரணம் மற்றும் அப்பகுதியில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அனைவரின் படங்களைப் போட்டு பேனர் வைத்து  ரேடியோ கட்டி ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடினர். 

ஓ.பி.எஸ் ஆதரவு அணி மாநில மகளிர் அணி  இணைச் செயலாளர் இமாக்குலின் சர்மிளா, முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், மாவட்டச் செயலாளர் வைகை பாலன் உள்ளிட்டோர் பங்கேற்று பொது மக்களுக்கு முட்டை பிரியாணி வழங்கினர். தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் என அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தங்கள் தான் அதிமுக என்பது போல் அடையாளம் காட்டி பொதுமக்களிடையே பிம்பத்தை ஏற்படுத்தி வருவது இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே எரிச்சலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் பலர்.

ஓ.பி.எஸ் அதிமுக கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை வாங்கியது போல், அவரது ஆதரவாளர்களும் கொடி சின்னங்களைப் பயன்படுத்தத் தடை வாங்க வேண்டும் என இ.பி.எஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

Next Story

'ஒரே ஒரு தயக்கம்'- இறுதிக் கட்டத்தை எட்டிய அதிமுக,பாமக கூட்டணி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 'One Reluctance' - AIADMK-PMK alliance reaches final stage

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் பா.ம.க., தே.மு.தி.க. அ.தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதியை பாமக கேட்பதாகவும், ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க அ.தி.மு.க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ம.க போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க ஏற்க தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.