இன்று (09/09/2021) முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, எஸ். ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.