Skip to main content

முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாள்.. அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை (படங்கள்) 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

 

முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு தங்க சாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர்த் தூவி தமிழ்நாடு அரசு சார்பில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

“கிளாம்பாக்கம் இணைப்பு சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது” - அமைச்சர் சேகர்பாபு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 Minister Shekharbabu says Buses will not ply on Clambakkam service Road

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து  திறக்கப்பட்டுள்ளது. சுமார் 397 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது. 

இதையடுத்து, கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகும் மக்கள் புகார் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று (04-01-24) ஆய்வு செய்தார். அதன் பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்து இயக்கப்படாது. பள்ளி மாணவர்களை பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துக்கான பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.