
நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையை அடுத்த ஆவடி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை காவல்துறையினர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஏற்கனவே இரண்டு முறை காவல்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.