Skip to main content

தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? - முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ிுப


தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசும் இதுகுறித்து அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆளுநரின் செயல்களை கண்டிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் சில அமைப்புக்கள் செய்தனர்.

 

இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பியது. மாநிலங்களவையில் இதுதொடர்பாக பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, " ஒரு மாநில அரசு அனுப்பிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்" என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினார்கள். மேலும் இதுதொடர்பாக சீமான், கே.எஸ். அழகிரி, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் கண்டனங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் நீதிபதி சந்துரு, "தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? 234 உறுப்பினர்களை கொண்ட அவையை அவமதிப்பவரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்