Advertisment

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி! (படங்கள்)

முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியராகப் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசுக் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியானசசிகாந்த் செந்தில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Chennai ias officers join congress party
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe