ADVERTISEMENT

"கரோனா நோயாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் இதுவரை எத்தனை நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்?" எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேள்வி!

01:00 PM Sep 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

"கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியதால்தான் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்" என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது. 5 மாத காலமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டும் எந்த பயனும் இல்லாத நிலையில், தற்போது மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான படுக்கைகளுடன் தனிமை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.


இதனிடையே ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் அறிவித்திருந்தன. ஆனால் அதன்படி எவ்வித நடைமுறையும் செயல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக கரோனாவால் பாதிக்கப்படுவோரை வீட்டுத் தனிமையில் வைத்து, 2 வாரங்கள் கழித்து கரோனா தொற்று இல்லை என அரசு கூறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் கிழக்கு மாவட்ட திமு.க செயலாளரும், குறிஞ்சிப்பாடி தி.மு.க. எம்.எல்.ஏ-வும், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர், "கரோனா நோயாளிகளுக்காக தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் இதுவரை எத்தனை நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் பல்வேறு இடங்களிலும் கரோனா நோயாளிகளை தங்க வைப்பதற்கு இடங்கள் தயார் என கூறிய நிலையில், அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுவது எதற்காக கரோனா நோயாளிகளை வீடுகளில் தங்க வைக்கப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதால் அதிகளவில் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்" என பல்வேறு குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT