Skip to main content

"திறமையை பயன்படுத்தாமல் விட்டிருந்தால் கால்நடை மேய்த்துக் கொண்டிருப்பேன்..." - கேரளா முன்னாள் கவர்னர் சதாசிவம் உருக்கம்

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

இந்தியாவின் முதல் குடிமகன் என்றால் அது நாட்டின் குடியரசுத் தலைவர்தான். அப்படிப்பட்ட குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் உச்சநீதிமன்றத்தின்தலைமை நீதிபதியாவார். இந்த பொறுப்பு அவ்வளவு உயரிய இடமாகும். அப்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் தான் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் சதாசிவம்.

 

erode


ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு விவசாயக் குடும்பம் மட்டும்தான் இவரது பின்னணி. இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு இவருக்கு ஒரு பொறுப்பை வழங்கியது. அது கேரளா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு. கேரளாவின் ஆளுநராக பதவிக்காலத்தை நிறைவு செய்த சதாசிவம், பிறகு தனது சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

 

 former Governor of Kerala Sadasivam Speech

 

அப்படித்தான் நேற்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது சதாசிவம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசும்போது, "நீதிபதிகள் எந்த மாநிலத்துக்கும் சென்று கடமை ஆற்ற வேண்டும். தற்போதுள்ள நீதிபதிகளில் மேகலாயாவுக்கு  பணிமாறுதல் கொடுத்தால் அங்கு செல்ல மாட்டேன் என முடிவு செய்கிறார்கள். அப்படி நானும் வேறு மாநிலத்தில் பணி செய்ய மாட்டேன் என முடிவு செய்திருந்தால் இந்த நேரம் நான் எனது கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் விவசாயம் செய்டும், மாடு மேய்த்துக் கொண்டும் தான் இருந்திருப்பேன். இப்படிப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு நான் வர முடியாமல் போயிருக்கும். மாணவர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையால் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.