Advertisment

“சென்னையில் கொலை; செஞ்சியில் உடல் புதைப்பு” - விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

former dmk mp kuppusaamy assistant kumar incident shocking information 

சென்னை அயனாவரம் சந்தம் கார்டன் தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது 71). இவர் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் மறுநாள் 17ஆம் தேதி வரையில் வீடு திரும்பவில்லை என குமாரின் மருமகன் மோகன் தாம்பரம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்தார்.

Advertisment

இந்த விசாரணையில் குமார் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் காரில் மூன்று பேர் இவரை ஏற்றி சென்றது தெரியவந்தது. அதன் பேரில் காரை விசாரணை செய்து குற்றவாளிகளை மூன்று பேரை பிடித்து இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். மேலும் தொடர்ந்த விசாரணையில் செஞ்சி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஜி மகன் ரவி வயது 40 என்பவர் தெரிய வந்து இவரை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.

Advertisment

இது தொடர்பான விசாரணையில் தொழிற்சங்க பொதுச் செயலாளர் குமாருக்கும், ரவிக்கும் இடையே ரியல் எஸ்டேட் சம்பந்தமான நிலம் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதனால் கடந்த 16ஆம் தேதி இவரை அழைத்து காரில் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கழுத்தில் கயிறு மற்றும் கையால் இறுக்கி கொலை செய்ததாகவும் கொலையை மறைக்க இவரை அவரது சொந்த ஊரான செஞ்சி எடுத்த தொண்டூர் அருகே உள்ள மேல் ஒலக்கூர் பசுமலை மலை அருகே ஒரு பள்ளத்தில் காரில் கொண்டு வந்து புதைத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் தாம்பரம் போலீசார் இவரை அழைத்து வந்து செஞ்சி அடுத்த பசுமலைமலை அடிவாரத்தில் புதைக்கப்பட்டு இருந்த குமாரின் சடலத்தை காண்பித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் போலீசார் மற்றும் செஞ்சி போலீசார் செஞ்சி வட்டாட்சியார் ஏழுமலை முன்னிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடவியல் மருத்துவர் மது அர்த்தனா, மருத்துவர் அருண்குமார் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவினர் மற்றும் உடலை தோண்டி எடுக்கும் பணியில் சமூக சேவகர் சிவராஜ் தோண்டி எடுத்த பிறகு அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெரும்பள்ளம் கிராமத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

former dmk mp kuppusaamy assistant kumar incident shocking information 

கொலை செய்யப்பட்ட குமார் , திமுக தொமுச மாநில செயலாளராகவும் எம்.பி ஆகவும் இருந்த குப்புசாமியின் உதவியாளராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் அயனாவரத்தில் இருந்து தனது மகள் விஜயலட்சுமி வீடான தாம்பரத்திற்கு வந்தபோது இந்த கொலை சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரவிக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் சென்னையை சேர்ந்த செந்தில்குமார், விஜய் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைத்தனர்.

Chennai incident Investigation police tambaram villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe