சிவகங்கை அருகே நடந்த சாலை விபத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
மனோகரன், மதுரையில் உள்ள தனது மகளைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தொண்டி மதுரை நெடுஞ்சாலையில் படமாத்தூர் எனும் பகுதி அருகே கேரளாவில் இருந்து காய்கறி வாங்குவதற்காக வந்துகொண்டிருந்த மினிவேன் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூவந்தி காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து பூவந்தி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.