orderly for jeorge

Advertisment

தமிழக காவல்துறையில் நிலவி வரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து வரும் காவலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் காவலர்கள் தற்கொலையை கட்டுப்படத்த, ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மருத்துவ குழுவை அமைக்கும் படி, வழக்கறிஞர் புருஷத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கை விசாரித்த அவர், காவலர்கள் மன அழுத்தம் பணிச்சுமை குறித்து பல்வேறு கருத்துகளை பதிவுசெய்தார். அதிகாரிகள் வீட்டில் போலீஸார் ஆர்டர்லிகளாக ஏன் பணியாற்றுகிறார்கள், 1979-ம் ஆண்டே ஒழிக்கப்பட்ட பின்னும் ஏன் தொடர்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

orderly for jeorge

Advertisment

மேலும், காவல் அதிகாரிகள் வீட்டில் எடுப்பு வேலை செய்ய ஒவ்வொரு காவல் அதிகாரியும் குறைந்தபட்சம் 12 ஆர்டர்லி காவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது தெரியவருகிறது. எனவே அதிகாரிகள் வீட்டில் உள்ள ஆர்டர்லி காவல் விவரங்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குனருக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, எந்தெந்த அதிகாரிக்கு எத்தனை ஆர்டர்லி உள்ளனர் என்ற பட்டியலை காவலர்களே முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.

orderly for jeorge  3

Advertisment

இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் வீட்டில் இருக்கும் ஆர்டர்லி காவலர் ஒருவர் இன்று காலை முகப்பேரில் உள்ள பழமுதிர் நிலையத்திற்கு அரசு அளிக்கும் காரில் (போலீஸ் போர்டு வைத்து) வந்த அந்த ஆர்டர்லி காவலர், ஜார்ஜ் வீட்டிற்கு தேவையான பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு அதனை காரில் வைத்துவிட்டு அங்கிருந்து புறபட்டு செல்கிறார். இந்த சம்பவம் அனைத்தையும் மறைந்திருந்த நமது குழு ரகசியமாக படம் படித்தது.

orderly for jeorge  4

பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் பெரும் விவாதமாக எழுந்து வரும் நிலையில், ஆர்டர்லி காவலர்களை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டும், நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் தன் வீட்டு பணிக்கு ஆர்டர்லி காவலர்களை பயன்படுத்திய, இந்த சம்பவமே உயர்அதிகாரிகள் ஆர்டர்லி காவலர்களுக்கு எந்த அளவிற்கு பணிச்சுமை, மனஅழுத்தம் தருகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.