/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps ok124563_2.jpg)
கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவைத் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்ததில், "தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும். தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்துகளைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும். கரோனா தடுப்பூசிகளையும் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் ஆகிசிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us