Skip to main content

‘ஜெ’ பிறந்தநாள்... பொதுமக்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

FORMER CM JAYALALITHAA BIRTHDAY KARUR DISTRICT ADMK PARTY LEADERS FREE BUS

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான கரூரில், பேருந்து போக்குவரத்து உள்ள அனைத்து வழித்தடங்களிலும், இலவச மினி பேருந்து இயக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களுக்கும் செல்லக்கூடிய நூறுக்கும் மேற்பட்ட மினி பேருந்துகளில் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி இன்று (24/02/2021) ஒருநாள் மட்டும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FORMER CM JAYALALITHAA BIRTHDAY KARUR DISTRICT ADMK PARTY LEADERS FREE BUS

 

இன்று (24/02/2021) காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கரூர் நகரப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மினி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வழித்தடங்களான வெங்கமேடு, தாந்தோனிமலை, காந்திகிராமம், வேலுச்சாமிபுரம், வாங்கல், மண்மங்கலம், நெரூர், புலியூர், வெள்ளியணை, டெக்ஸ் பார்க், விஸ்வநாதபுரி ஆகிய பகுதிகளுக்கு, சுமார் 20 கிலோமீட்டர் வரை, மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

 

வழக்கமான நாட்களில் மாவட்டம் முழுவதும் இயங்கக்கூடிய மினி பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்வார்கள். இன்று (24/02/2021) ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் இரண்டு லட்சம்  பயணிகள் வரை இப்பேருந்துகளில் பயணிக்க வாய்ப்புள்ளது. 

FORMER CM JAYALALITHAA BIRTHDAY KARUR DISTRICT ADMK PARTY LEADERS FREE BUS

 

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.