former cm jayalalitha poes garden chennai high court

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கிய அவசர சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக, அதை அரசுடமையாக்குவது குறித்து, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

former cm jayalalitha poes garden chennai high court

இந்த வழக்கை அவசர வழக்காக நாளை (15/09/2020) விசாரிக்க அனுமதிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் தீபக் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது, பேரவைக் கூட்டம் நடைபெறுவதால், அவசர சட்டம், சட்டமாக நிறைவேற்றக்கூடும் என்பதால், அந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அவசர வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட வாய்ப்பில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால், அதனை எதிர்த்து வழக்கு தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.