திரைப்படமாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு!- தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர தீபாவிற்கு அனுமதி!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கத் தடை விதிக்க, உரிமையியல் வழக்கு தொடர, தீபாவிற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

former cm jayalalitha biography chennai high court deepa case

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக, தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இதேபோல், கெளதவ் வாசுதேவ்மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்கவிருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

former cm jayalalitha biography chennai high court deepa case

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரி்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

bio graphy chennai high court deepa case FORMER CHIEF MINISTER jayalalitha Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe