பொது சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கத் தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அமிர்தாபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கப்பட இருப்பதை தடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH2_0.jpg)
போலி பத்திரங்கள் மூலம் பொது சாலையை தனியார் இடம் என மாற்றி, அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலைகள் வைக்கப்பட இருப்பதாகவும், பொது சாலையை தனியார் இடம் என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை வைக்கப்படவிருக்கும் இடம் பொது சாலையா என்பதைக் கண்டறிய அரசுத் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து, பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Follow Us