/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/52_53.jpg)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தன் தாயின் இறப்பின் போது ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ““என்னை ஈன்றெடுத்த அருமைத் தாய் திருமதி ஓ.பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையில் இருந்த தருணத்தில் நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர், ஜார்கண்ட மாநில ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள், பிற கட்சித் தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றியநகரபேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், என் உயிரினும் மேலான எனதருமை தொண்டர்கள், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், பத்திரிகைதுறையைச் சார்ந்தவர்கள், ஊடகவியல் நண்பர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)