Former Chief Minister MGR statue desecrated

சேலம் ஆத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை மீது சேற்றினை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் 20 ஆண்டுகள் முன்பு அதிமுக சார்பில் வைக்கப்பட்டது. எம்ஜிஆர் சிலைக்கு அவரின் பிறந்தநாள் மற்றும் அவரின் நினைவுநாளில் அதிமுகவினர் மலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

Advertisment

இந்நிலையில், நேற்றிரவு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையின் மீது மர்மநபர்கள் சேற்றினை வீசி அவமதிப்பு செய்துள்ளனர். இத்தகவலை அறிந்த அதிமுக ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர்.

தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற ஆத்தூர் காவல்துறையினர் சிலையின் மீது இருந்த சேற்றினை அகற்றி சுத்தம் செய்தனர். சேற்றினை வீசிய நபர்களைத்தேடி கைது செய்யுமாறு காவலர்களிடம் அதிமுகவினர் புகாரளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மீது சேற்றினை வீசிச்சென்ற மர்மநபர்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.