மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'குயின்' என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_247.jpg)
இதற்கு தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் மீதான விவாதங்கள் இன்று நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு தீபா இல்லை என்றும், ஏற்கெனவே வெளிவந்த புத்தகத்தை தழுவியே 'தலைவி' திரைப்படம் எடுக்கப்படுகிறது என்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதேபோல் குயின் புத்தகத்தை தழுவியே 'குயின்' சீரிஸ் எடுக்கப்படுவதாக கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு தெரிவித்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)