Advertisment

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழா மலர் வெளியீடு! 

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத் திறப்பு விழா நிகழ்வினையொட்டிய விழா சிறப்பு மலரை இன்று (10/05/2022) சட்டப்பேரவையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெற்றுக் கொண்டார்.

Advertisment

இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முனைவருமான துரைமுருகன், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணை தலைவர் கு.பிச்சாண்டி, அரசுக் கொறடா முனைவர் கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள். சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் படத்திறப்பு விழா நடந்த நிலையில் மலர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

chief minister Tamilnadu tn assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe