Former Army soldier deposited property worth Rs. 4 crore in temple

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியரின் மகள்கள் ராஜலட்சுமி மற்றும் சுபலட்சுமி ஆவர். இத்தகைய சூழலில் தான் விஜயன் சொத்து பிரச்சனை காரணமாகவும், குடும்பச் சண்டை காரணமாகவும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் உண்டியலில் தனது 2 வீட்டுப் பத்திரங்களையும் காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்.

இந்த சொத்தின் மதிப்பு ரூ. 4 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோயில் உண்டியல் என்னும் பணி இன்று (24.06.2025) நடைபெற்றது. அப்போது கோயிலின் இணை ஆணையர் சண்முகசுந்தரம் 2 வீட்டுப் பத்திரங்களையும் கைப்பற்றினார். அதன் பின்னர் மேல் நடவடிக்கைக்காக இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவுக்காகத் தகவல் தெரிவித்துள்ளார். மனமுடைந்து குடும்பச் சண்டை காரணமாக ராணுவ வீரர் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இச்செயல் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சொத்துப் பத்திரத்தை மீட்கும் முயற்சியிலும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதோடு தந்தை சண்முகசுந்தரம் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.