Former Army man arrested in woman case near namakkal

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷியாமளா (35, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கூலித்தொழிலாளி. இவருடைய கணவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அன்பரசு (52). ஷியாமளா, தினமும் கூலி வேலைக்குச் செல்லும்போது அன்பரசுவின் தோட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது அன்பரசு அவரை வழிமறித்து ஷியாமளாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், ஆகஸ்ட் 1 தேதி காலையில் வழக்கம்போல் ஷியாமளா கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அன்பரசு குடிபோதையில் அவரை வழிமறித்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இதற்கு ஷியாமளா மறுப்பு தெரிவித்ததால் அவரை மறைவான இடத்திற்குத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

ஒருவழியாக அன்பரசுவின் பிடியில் இருந்து தப்பித்து ஓடிய ஷியாமளா, நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் அழுதபடி கூறியுள்ளார். சோர்வான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஷியாமளா அளித்த புகாரின்பேரில், நாமகிரிப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் அன்பரசு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பரசு, பின்னர் அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். தனியாகச் சென்ற பெண்ணை, முன்னாள் ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.