Advertisment

திமுகவுக்கு சென்ற அமமுக முன்னாள் எம்.எல்.ஏ!

கடந்த ஜீன் 29ந்தேதி தினகரனை விட்டு தப்பி ஓடப்பார்க்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுயிருந்தோம். அதில் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்ற முன்னாள்மா.செ சிவசங்கரன், அமமுக மாவட்ட துணை செயலாளர் சிங்கப்பூர்.நடராஜன் போன்றவர் கடந்த ஜீன் 29ந்தேதி காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Advertisment

 Former ammk MLA to go to DMK!

இவர்களை தொடர்ந்து, இன்னும் சில முன்னாள்எம்.எல்.ஏக்கள் அமமுகவை விட்டு பிற கட்சிகளுக்கு செல்லவுள்ளார்கள் என தெரிவித்திருந்தோம். நாம் முன்பே கூறியிருந்ததைப்போல், அதிமுகவில் இருந்த அமமுகவுக்கு சென்ற ஆற்காடு முன்னாள்எம்.எல்.ஏவும், முன்னாள்அதிமுக மா.செவுமான நீலகண்டன், ஜீலை 5ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

Advertisment

இதேபோல், நீலகண்டன் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைய வைப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளார். இதேபோல் இன்னும் சில தினங்களில் அமமுகவில் உள்ள இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்கின்றனர்.

MLA ammk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe