/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1041_0.jpg)
வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கிச் சென்ற பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் சென்ற கார் விபத்தில் சிக்கி உள்ளது.
நாகை மாவட்டம் திருப்பூண்டி காரைநகர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியனின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் காரின் ஓட்டுநர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. காரில் இருந்த ஓ.எஸ்.மணியன் சீட்டு பெல்ட் அணிந்திருந்ததால் காயங்கள் இன்றி தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்பழகன்என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)