சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 101-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் சனிக்கிழமை மதியம் 12. மணியளவில்ஆட்சிமன்றக் கூடத்தில் நடைப்பெற்றது. இதில் போலி சான்றிதழ் உள்ள பேராசிரியர்கள், போதிய உரிய கல்வித்தகுதி இல்லாத பேராசியர்கள், தணிக்கைத் தடையில் மிகை ஊதியம் வாங்கியவர்கள் அனைவருக்கும் பணி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைச் செயலர் அவர்கள் கலந்து கொண்டும் அவரின் முன்னேயேபதவி உயர்வு வழங்க முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PERIYARjpg.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவருக்கு இதைப்பற்றி எந்த விஷயத்தையும் கூறாமலே அனைத்தையும் மறைத்துவிட்டனர். இதில் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் உறவினர் செல்வத்தின் பணி நியமனமே தவறு என நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது பதவி உயர்வு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணை பேராசிரியர் வெங்கடேசன் பதவி உயர்வுக்கு நேர்காணல் நடத்தியவர்களே பதவிஉயர்வுக்கு இவர் தகுதி இல்வாதவர் என அறிவுறுத்தியும் அவருக்கு பதவிஉயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கல்வியியல் துறை இணை பேராசிரியர் தனலட்சுமி அவர்களின் அனுபவச் சான்றே போலியானது, என தெரிந்தும் பதவிஉயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் பத்திரிகைக்கு கொடுக்காத செய்திக்கு அவர் கொடுத்ததாக கூறி அவரை பணி இடைநீக்கம் செய்ததோடு அவர் மீது ஒரு நபர் விசாரணை குழு அமைத்தும் அக்குழு அமைத்தது சட்டப்படி முறைகேடானது என அவர் ஆதாரத்துடன் எடுத்துரைத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சிக் குழுவில் பரிந்துரை செய்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erererer.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பேராசிரியர்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தனர். பெரியார் பல்கலைக்கழகம் செய்யும் ஊழல்களை யாராவது தட்டிக் கேட்டால் நிர்வாகம் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நேர்மையான துணைவேந்தர் என தன்னை உயர்வாகக் கூறிக் கொள்ளும் துணை வேந்தர் குழந்தைவேல் ஊழல் வாதிகளின் கைப்பாவையாக மாறி இருப்பது வேதனை அளிப்பதாக வேதனையுடன் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதுங்கள் எங்களை தட்டிக் கேட்க யாருமில்லை என்பது போல இந்த ஆட்சிக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இணைப் பதிவாளர் சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது . அதேபோல் நீதிமன்றம் உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்திரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அவருக்கு இன்கீரிமென்ட் போடாமலே இருப்பதும் அதை கேட்டதற்கு அந்த பேராசிரியருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
தட்டிக்கேட்டால் முட்டிபோடு என்ற எண்ணத்தில் இந்த அரசின் அதிகாரதத்தை பயன்படுத்தி செயல்படுவது என்பது படுமோசமானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)