
தஞ்சாவூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் இரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் பிரபு. தற்போது அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், பழவனேரி சாலைப் பகுதியில் நேற்று இரவு டெய்லர் கடை ஒன்றின் முன்பு சக நண்பர்களுடன் பிரபு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென பைக்கில் வந்த மர்ம நபர்கள் பிரபுவை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் பிரபுவின் உடலைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பிரபுவின் ஆதரவாளர்கள் குவிந்தனர். முன்னாள் அதிமுக கவுன்சிலரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)