அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Former ADMK MLA The anti-corruption department raided the house

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை தியாகராய நகர் சட்டமன்றத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்சத்யா,. இவரின் வீட்டில்வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்து வருகின்றனர். இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு சென்னையில் சொந்தமான 16 இடங்களிலும், கோயம்புத்தூரில் ஒரு இடத்திலும், திருவள்ளூரில் ஒரு இடத்திலும் என மொத்தம் 18 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சத்யா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

admk Chennai DVAC raid
இதையும் படியுங்கள்
Subscribe