/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4579.jpg)
சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமா. இவருக்கும், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் இளைய மகன் சசிமோகன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2019ம் ஆண்டு இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு விழா, சொந்த ஊரான காரிமங்கலம் அருகேயுள்ள கெரகோட அள்ளி கிராமத்தில் நடைபெற்றது. அதில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில்,சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா வீட்டில் விளக்கு ஏற்றும்போது அவர் மீது தீப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vck ad_0.jpg)
இன்று விடியற்காலை சிகிச்சை பலனின்றி பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதுதொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கவிருக்கிறது. இறப்புக்கு முன்பு மாஜிஸ்திரேட்டிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Follow Us