Advertisment

ஹால்டிக்கெட்டை மறந்த மாணவி!  கார் டிரைவர் செய்த உதவி!

mani

மதுரையில் மேலூர் சூரக்குண்டு பகுதியைச்சேர்ந்த மாணவி டயானா. இவருக்குபசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலையில் அவர் தனது தாயார் தனலட்சுமியிடன் கல்லூரிக்கு வந்தார். தேர்வு மையத்திற்குளு சென்றபோதுதான் தனது ஹால்டிக்கெட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது.

Advertisment

இதனால் டயானா கண் கலங்கினார். தாயார் வேதனை அடைந்தார். இதைக்கண்ட கார் டிரைவர் மணி என்பவர், டயானாவை காரில் அழைத்து சென்று மின்னல் வேகத்தில் 55 கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் கடந்து தேர்வு மையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். இதனால் டயானா மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத சென்றார். தனலட்சுமி கொடுத்த பணத்தையும் வாங்காமல், தக்க சமயத்தில் உதவி செய்த டிரைவர் மணியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Advertisment
neet madurai driver mani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe