Advertisment

'மன்னித்துவிடுங்கள்... உங்கள் அன்பால் பூரித்துப் போனேன்' - நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கம்!

'Forgive me if I have hurt you' - Judge Sanjib Banerjee

கடந்த 15ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில்,சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார். பிரிவு உபசார விழாவைப் புறக்கணித்த அவர், வீட்டைக் காலி செய்து கொல்கத்தா புறப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி. அதில், 'நேரில் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கை உங்களைப் புண்படுத்தியிருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நீதிமன்றத்தின் நலனுக்கானது. என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்துப் போயிருக்கிறேன். ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாகதகர்த்தெறிய இயலவில்லை. திறமையான நிர்வாகத்தைமேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கு நன்றி. சொந்த மாநிலம் என 11மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisment

lawyers Judge highcourt Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe