Forgery incident Court order for 3 people

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடுவீடாகச் சென்று மருத்துவக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 8 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று உடல் நல பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவர்கள் குழு ஏற்கெனவே கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உடல் நிலை எப்படியுள்ளது என பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

Forgery incident Court order for 3 people

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதான மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.