மணல் கடத்தல்  sand smuggling

கள்ளக்குறிச்சி அருகேமணல் கடத்தலைத் தடுத்தவன காப்பாளரைக்கொல்ல முயன்ற நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

சில தினங்களுக்கு முன்புகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் மணல் கடத்துவதாக வனச்சரக அலுவலர் காதர்பாட்சா அவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து காதர் பாட்ஷா மற்றும் வனக்காப்பாளர் ராஜ்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் 1:30 மணி அளவில் மணல் கடத்தல் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை கையும் களவுமாக பறிமுதல் செய்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் ஆலங்குப்பம் வனப்பகுதியில் மினி லாரியில் மணல் கடத்துவதாக தகவல் கிடைக்கவே வனக்காப்பாளர் ராஜ்குமார் மட்டும் பைக்கில் அந்த மணல் கடத்தல் லாரியை பிடிப்பதற்காகதுரத்திசென்றுள்ளார். அப்போது ராஜ்குமார் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார் லாரி ஓட்டுநர்.

ராஜ்குமார் பைக்கில் இருந்து குதித்து ஓடி கீழே விழுந்து, படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதனால் மிரண்டு போன லாரி டிரைவர் மணல் கடத்தல் லாரியை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டுத்தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அந்த லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே உயிர் தப்பிய வனக்காப்பாளர் ராஜ்குமார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வனத்தை பாதுகாக்கும் வன அலுவலர்களை மணல் கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.