Advertisment

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் மனைவி காலமானார்!

forest minister sreenivasan wife

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் உடல் நலக்குறைவால் இன்று (02/05/2020) காலமானார். இந்த தகவலை சென்னையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் சீனிவாசனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. செய்தியை அறிந்த அமைச்சர் அதிர்ச்சியடைந்ததுடன் சோகத்தில் மூழ்கினார். இந்த செய்தியை கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

Advertisment

அதன்பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள உடனடியாக கார் மூலம் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார். இதனிடையே அமைச்சரின் மனைவி மறைந்த செய்தியை அறிந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அமைச்சர் சீனிவாசனின் இளையமகன் வெங்கடேஷ் வீட்டில் வைத்திருக்கும் கண்ணாத்தாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment
Dindigul Sreenivaasan passed away wife
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe