Skip to main content

தேனியில் மீண்டும் ஒரு காட்டுத்தீ- தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

தேனிமாவட்டம் கம்பம் மேகமலை வன உயிரின சரணாலையத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயினால் அப்பகுதியிலுள்ள மூலிகைகள் எரிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

theni

 

தேனிமாவட்டம் கம்பம் வண்ணத்துப்பூச்சி பாறை, வெண்ணியாறு கேட் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயின் வெப்ப தாக்கத்தால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும் விளைநிலங்களுக்குள்ளும் புகும் அபாயம் உள்ளதாகவும் வனத்துறை எச்சரித்துள்ளது.  மேலும் இந்த காட்டுத்தீயில் அரியவகை மூலிகைகள் எரிந்து அழிந்துபோகும் வாய்ப்புள்ளதால் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடிவருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காட்டுத்தீ பரவல்; திணறும் வனத்துறை

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
spread of wildfires; A forest department that is stifling

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.