Advertisment

வால்பாறை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை மேல் நீராறு. சோலையாறு காடம்பாறை மேல் ஆழியாறு ஆகிய ஐந்து அணைகளும் நிரப்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இரண்டுமுறை நிரம்பியது .

Advertisment

forest department warns vaalpaarai people

இந்நிலையில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் பிஏபி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . இதனிடையே தென்மேற்கு பருவமழையின் போது நிரம்பாத ஆழியாறு , பரம்பிக்குளம் அணைகள் வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பும் என்ற நம்பிக்கையில் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர் . அணைகளின் நீர்மட்டம் சோலையார் அணையில் நேற்று காலை 159. 33 அடி நீர் மட்டும் இருந்தது அணைக்கு வினாடிக்கு 352 கனஅடி தண்ணீர் வரத்தும் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisment

பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் நேற்று காலை 70.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 507 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிலவரம் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வால்பாறை 8 சோலையாறு 11 மேல் நீராறு 14 கீழ் நீராறு 15 காடம்பாறை என அனைத்து இடங்களிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும் வன விலங்குகள் கன மழையால் சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Forest Department rain Valparai wild animals
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe