Skip to main content

வால்பாறை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை  மேல் நீராறு. சோலையாறு காடம்பாறை மேல் ஆழியாறு ஆகிய ஐந்து அணைகளும் நிரப்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இரண்டுமுறை நிரம்பியது . 
 

forest department warns vaalpaarai people


இந்நிலையில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் பிஏபி பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . இதனிடையே தென்மேற்கு பருவமழையின் போது நிரம்பாத ஆழியாறு , பரம்பிக்குளம் அணைகள் வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பும் என்ற நம்பிக்கையில் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர் . அணைகளின் நீர்மட்டம் சோலையார் அணையில் நேற்று காலை 159. 33 அடி நீர் மட்டும் இருந்தது அணைக்கு வினாடிக்கு 352 கனஅடி தண்ணீர் வரத்தும் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் நேற்று காலை 70.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 507 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிலவரம் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வால்பாறை 8 சோலையாறு 11 மேல் நீராறு 14 கீழ் நீராறு 15 காடம்பாறை என அனைத்து இடங்களிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


மேலும் வன விலங்குகள் கன மழையால் சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.