சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கண்ணன் என்பவரின் வீட்டிற்குள் 7அடி நீளமுள்ள முதலை ஒன்று கிராமத்தையொட்டி ஓடும் வெள்ளாற்றில்இருந்து செவ்வாய்க்கிழமை (01.06.2021) இரவு வந்துள்ளது. முதலையைப் பார்த்த 5க்கும் மேற்பட்ட நாய்கள்ஒன்றாக இணைந்து குறைத்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது முதலை முகத்தில் அடிபட்ட நிலையில் இருந்துள்ளது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் முதலையின் முகத்தில் துணியைப் போட்டு, கயிற்றால் கட்டி சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் முதலையை மீட்டுள்ளனர்.