Advertisment

வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் மோதல்- குணா குகையில் பரபரப்பு

Forest department officials clash with tourists - tension at Guna Cave

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்துசுற்றுலாப் பயணிகள் வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியாவை சேர்ந்த சிலர் குழுவாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். குணா குகையை சுற்றிப்பார்க்க சென்ற அவர்கள் நுழைவாயில் பகுதியில் தலா பத்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுள்ளனர்.

பின்னர் குணா குகை நோக்கிச் சென்ற பொழுது அங்கிருந்த வனத்துறையினர் நீங்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளீர்கள் எனவே நூறு ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் முறையாக போர்டு வைக்கவில்லை என வனத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பினரும் சரமாரியாக மோதிக்கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் தாக்குதல் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Dindigul district Forest Department guna
இதையும் படியுங்கள்
Subscribe