Forest Department Description

கோவை வனக் கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

உயிரிழந்த யானைகளில் 13 யானைகள்நோய் தொற்றுக்கு ஆளாகிஇறந்துள்ளன. மற்ற யானைகள் கூட்டத்தில் ஏற்பட்டமோதலில்இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்கடந்த 2ம் தேதி பெண் யானைசுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வனத்துறைசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வனவிலங்குகளின் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். யானைகள் வாழ்விடத்தை மேம்படுத்த, யானைகள் உயிரிழப்புகளை குறைக்க சிறப்புகுழு அமைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சியாளர்கள்,கால்நடை மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்படும்.சிறப்பு ஆய்வுக் குழு பரிந்துரையின் பேரில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் உயிரிழப்பு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குபுறம்பானது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.