கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதுகுடி சுடுகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ருவாண்டா நாட்டைச் சேர்ந்த புருனேமுகவேனிமானா (27 வயது) என்பவர் சுமார் 800 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததாக அவரை கையும் களவுமாககைது செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/annamalai university444.jpg)
இந்த வெளிநாட்டு மாணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள நிலையில் தனது ஊருக்கு திரும்ப பணம் இல்லாத காரணத்தால் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்நாடக அரசு செயலாளர் காரை ருவான்டா நாட்டைச் சேர்ந்த இரு குற்றவாளிகளை அண்ணாமலை நகர் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அண்ணாமலை நகர் காவல் துறை ஆய்வாளர் தேவேந்திரன் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Follow Us