Advertisment

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி! 

foreign jobs money coimbatore police arrested one person

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வேலை வாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கோவை மாவட்டம், காட்டூர் பகுதியில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முருகன் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட தாரணி என்பவர் வேலைக்காக அங்கு அணுகியுள்ளார். பின்னர், ஐந்து லட்சம் ரூபாயை பல்வேறு தவணைகளாக முருகனுக்கு அளித்துள்ளார். ஆனால் தாரணிக்கு வேலை வாங்கித் தராமல் முருகன் மோசடி செய்தது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து, தாரணி அளித்த புகாரின் பேரில் முருகனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இதேபோல் பலரிடம் முருகன் மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

police Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe