Advertisment

'வெளிநாடு தப்பியோட்டம்'- ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நீளும் விசாரணை

'Foreign fugitive accomplice'- Prolonged trial in Armstrong case

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலைதொடர்பாக இதுவரை 18 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்திய வழக்கில் தொடர்புடைய குற்றவாளியாகக் கருதப்படும் சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் ஹரிஹரன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிவா உட்பட 3 பேருடன் திருச்செந்தூர் காரில் சென்றதும், அங்கிருந்து மதுரை சென்றகிருஷ்ணன் தன்னுடைய காரை சிவாவிடம் கொடுத்து சென்னைக்கு செல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் தாய்லாந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாய்லாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு அவர்கள் தப்பித்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில்தலைமறைவாக உள்ளரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை பிடிக்க போலீசார் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment
amstrong case investigated police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe