Skip to main content

இனி வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிக வரி?? - அமைச்சரவையில் எடப்பாடி

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
edapadi

 

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு காலால் வரி 12 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக இன்று அமைச்சவரை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் என தகவல்.

சார்ந்த செய்திகள்

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்; முதல்வர் விளக்கம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
kilambakkam Bus Station Affair CM explanation

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று (12.02.2024) காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். இதனை மீறும் வகையில் சட்டமன்ற பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை ஆளுநர் ஆர்.என். ரவி மரபுகளை மீறி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிகளை ஆளுநர் ஆர்.என். ரவி மீறி உள்ளார் இது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும்,  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்ப்ட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் தெரிவித்த குறைகளைத் தான் நான் அறிக்கையாக வெளியிட்டேன். முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு திறந்திருந்தால் பேருந்து நிலையம் தொடர்பாக பிரச்சனை எழுந்திருக்காது என்பதை அவையில் குறிப்பிடுகிறேன். சிறு சிறு பிரச்சனைகள் இருப்பதாக அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறு சிறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருந்தால் இந்த விவாதமே ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்தார்.

kilambakkam Bus Station Affair CM explanation

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் போன்று சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமல்ல பெரும், பெரும் பிரச்சனைகள் எல்லாம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தன. அந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இன்னும் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக வாருங்கள். அந்த பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம்”எனப் பதிலளித்தார். 

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.